தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்(TCC) முக்கிய பிரமுகரான பரிதி பிரான்சில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். நேற்றைய தினம்(ஞாயிறு) இரவு இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் வேளை அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக மாவீரர் தின நிகழ்வுகளை புதிதாக வந்த சிலர் தாமே நடத்துவோம் என பிரித்தானிய உட்பட சில நாடுகளில் சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றனர்.
Read the full story »
செய்திகள் »2007ஆம் ஆண்டு இராணுவத்தினர் கைது செய்த தனது மகனை இன்னும் ஒரு மாதத்துக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீட்டுத் தரத் தவறினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று குருநகரைச் சேர்ந்த தாய் நேற்று ஆவேசத்துடன் தெரிவித்தார். Read the full story »மட்டக்களப்பு ,களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் நேற்று இரவு பாம்பு தீண்டியதால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு சமையல் அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது சமையலறை கதவில் உள்ள இடைவெளியூடாக வந்த பாம்பு தீண்டியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். Read the full story »வட மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்காக 15 லட்சம் அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசு ஒதுக்கியுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் ஜப்பான் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் உதவித்திட்டங்களுக்காக இந்த நிதியை ஜப்பான் ஒதுக்கியுள்ளது. Read the full story »இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வினை தமிழ் மக்கள் தாங்களேதான் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கை அரசு தரும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இவ்வாறு இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கேள்வி எழுப்பினார். Read the full story »இரவு கடையொன்றுள் புகுந்து எடுத்த பணத்தை மறுநாள் காலை நவீன சந்தை மேல்மாடியில் வைத்து எண்ணிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டான். Read the full story »உள்நாட்டிலே தீர்வு காணப்படுவதற்கு இருக்கக்கூடிய அனைத்து வழிகளையும் இந்த அரசு மூடிவைத்திருக்கின்றது. உள்நாட்டில் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுப்பதையும், வெளிநாடு சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதையும் தவிர வேறு வழிகள் தமிழ் மக்களுக்குக் கிடையாது. இதைத்தான் இன்று கூட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றது. Read the full story »கடந்த 25-10-2010 அன்று வவுனியாவில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுப்ரமணியம் அர்ச்சுனா என்ற 22 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பைச் சேர்ந்தவர் என்பதும் தற்காலிகமாக வவுனியாவில் வசித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read the full story »யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று, பளைப் பகுதியில் வீதி அகலிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்தனர். Read the full story »அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவர் அண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மீது போர்க்குற்றங்களைச் சுமத்தி தகவல்களை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது அவர் மகிந்தர் மீது வழக்கையும் தொடுத்திருந்தார். Read the full story »சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வழியாக கனடாவிற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் செல்ல முயன்றவர்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் திடீர் சோதனை போட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த நாகலிங்கம் (25) போலியாக தயாரித்த இந்திய பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர். Read the full story » | |||||